இந்தியா
ராஜஸ்தானில் லாரி மீது கார் மோதி 8 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்
- ராஜஸ்தானில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலியாகினர்.
- சாலை விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜலூர் மாவட்டம் சடியா பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் இன்று பார்மீர் மாவட்டத்தில் திருமண நிகழச்சியில் பங்கேற்கச் சென்றனர். குடும்பத்தினர் அனைவரும் காரில் பயணம் செய்தனர்.
பார்மர் மாவட்டத்தின் குடா மலானி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது கார் சாலையின் எதிரே வேகமாக வந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 8 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் சாலை விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.