இந்தியா

ஆந்திரா, ஒடிசாவுக்கு செல்லும் பிரதமர் மோடி எப்போது மணிப்பூருக்கு செல்வார்- ப.சிதம்பரம் கேள்வி

Published On 2024-06-11 12:05 GMT   |   Update On 2024-06-11 12:05 GMT
  • மைதிக்காக மணிப்பூர் மக்கள் ஓராண்டுக்கும் மேல் காத்திருக்கின்றனர்.
  • பிரதமர் மோடி ஆந்திரா, ஒடிசா மற்றும் ஜி7 மாநாட்டிற்காக இத்தாலி என பல இடங்களுக்கு செல்ல உள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் மொத்தம் 71 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதில் 61 பேர் பா.ஜ.க. எம்.பி.க்கள் ஆவர்.

கூட்டணி கட்சிகளை சேர்ந்த 11 பேருக்கு மந்திரி சபையில் இடமளிக்கப்பட்டு இருக்கிறது. இதில் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு தலா 2 பதவிகளும், மீதமுள்ள 7 கட்சிகளுக்கு தலா ஒரு பதவியும் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், "அமைதிக்காக மணிப்பூர் மக்கள் ஓராண்டுக்கும் மேல் காத்திருக்கின்றனர். இவ்விவகாரத்தில் முன்னுரிமை எடுத்து அரசு செயல்பட வேண்டும்" என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பக்வத் பேசியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

"நாளை முதல் வரும் 14ம் தேதி வரை பிரதமர் மோடி ஆந்திரா, ஒடிசா மற்றும் ஜி7 மாநாட்டிற்காக இத்தாலி என பல இடங்களுக்கு செல்ல உள்ளார். மேலும் அவருக்கு வாக்களித்த வாரணாசி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளார்.

இவை எல்லாம் நல்லதுதான். ஆனால், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு மோடி எப்போது செல்வார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

Similar News