பார்க்கிங் பிரச்சனையில் விஞ்ஞானி அடித்துக் கொலை.. பரபரப்பு வீடியோ
- இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் IISER-ல் விஞ்ஞானியாக பணியாற்றி வந்தவர்
- குற்றம் சாட்டப்பட்ட மோன்டி தான் அபிஷேக்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
பஞ்சாபில் மொஹாலியில் இயங்கி வரும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் IISER-ல் விஞ்ஞானியாக பணியாற்றி வந்தவர் அபிஷேக் ஸ்வர்ண்கர் (40). ஜார்க்கண்டை சேர்ந்த இவர் பஞ்சாபின் மொஹாலியின் செக்டார் 66 இல் தனது பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டுக்கு அருகே அவர் தனது பைக்கை நிறுத்திக் கொண்டிருந்தபோது அவரது பக்கத்து வீட்டுக்காரர் மோன்டி (26) அதை எதிர்த்தார்.
இதன் பிறகு, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மோன்டி அபிஷேக்கை அடிக்கத் தொடங்கினார், இதனால் அவர் சாலையில் விழுந்தார்.
தரையில் விழுந்த அபிஷேக்கை மோன்டி தாக்கினார். அருகில் இருதவர்கள் அவரை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது. வீடியோவில், அபிஷேக்கை சிறிது நேரம் எழுந்து நிற்பது காணப்பட்டது. ஆனால் பின்னர் அவர் மீண்டும் விழுந்தார்.
இதன் பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மோன்டி தான் அபிஷேக்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.