இந்தியா

VIDEO: ஹோலி வண்ணம் பூசிக் கொள்ள மறுத்த இளைஞர் கழுத்தை நெரித்துக் கொலை

Published On 2025-03-14 13:04 IST   |   Update On 2025-03-14 13:56:00 IST
  • ரால்வாஸ் கிராமத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்த 25 வயது இளைஞர் ஹன்ஸ்ராஜ்.
  • அசோக், பப்லு மற்றும் கலுராம் ஆகிய மூவர் ஹன்ஸ்ராஜ் மீது கலர் பொடி பூச முனைத்துள்ளனர்.

நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஹோலி வண்ணம் பூசிக்கொள்ள மறுத்ததால் இளைஞர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் ரால்வாஸ் கிராமத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்த 25 வயது இளைஞர் ஹன்ஸ்ராஜ். கடந்த புதன்கிழமை மாலை இவர் கிராம நூலகத்தில் படித்துகொண்டிருந்தபோது ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் அசோக், பப்லு மற்றும் கலுராம் ஆகிய மூவர் ஹன்ஸ்ராஜ் மீது கலர் பொடி பூச முனைத்துள்ளனர்.

ஆனால் வண்ணம் பூசிக்கொள்ள ஹன்ஸ்ராஜ் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் உதைத்து, பெல்ட்டால் விளாசியுள்ளனர்.

இதன் உச்சமாக மூவரில் ஒருவன் ஹன்ஸ்ராஜ் கழுத்தை நெரித்து கொலை செய்தான். பின்னர் மூவரும் தப்பியோடிய நிலையில் ஹன்ஸ்ராஜ் உடலுடன் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூவரையும் கைது செய்ய வேண்டும் என நெடுஞ்சாலையில் உடலை கிடத்தி அவர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் போலீசாரின் உறுதிமொழியை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News