இந்தியா

என்சிசி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு- 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்

Published On 2023-01-28 20:08 IST   |   Update On 2023-01-28 20:08:00 IST
  • ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி நாட்டைப் பிரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • போலீஸ் மற்றும் துணை ராணுவப் படைகளில் பெண்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

புதுடெல்லி:

டெல்லி, கரியப்பா பரேட் மைதானத்தில் நடைபெற்ற என்.சி.சி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். என்.சி.சி அணிவகுப்பை பார்வையிட்டதுடன், என்.சி.சி.-ன் 75வது ஆண்டு சிறப்பு அஞ்சல் தலை மற்றும் 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். கடந்த 75 ஆண்டுகளாக நாட்டிற்கு சேவை செய்த என்சிசி வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் மன உறுதியை பிரதமர் பாராட்டினார்.

விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

இந்தியாவின் நேரம் வந்துவிட்டது. இன்று உலகின் பார்வை நம் நாட்டை நோக்கி இருக்கிறது. இதற்கு மிகப்பெரிய காரணம் இந்தியாவின் இளைஞர்கள்தான். கடந்த 8 ஆண்டுகளில் போலீஸ் மற்றும் துணை ராணுவப் படைகளில் நமது பெண்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி நாட்டைப் பிரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த முயற்சிகள் வெற்றி பெறாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News