இந்தியா

2 நாள் அமெரிக்க பயணம்- டிரம்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி

Published On 2025-02-07 18:00 IST   |   Update On 2025-02-07 18:00:00 IST
  • அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றார்.
  • டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு உத்தரவுகளை தொடர்ச்சியாக பிறப்பித்து வருகிறார்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றார்.

டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு உத்தரவுகளை தொடர்ச்சியாக பிறப்பித்து வருகிறார்.

மேலும், இவரது பல்வேறு கருத்துக்கள் மற்றும் நிர்வாக ரீதியிலான முடிவுகள் உலக அளவில் அதிர்வலைகளையும், கடும் கண்டனங்களையும் எதிர்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், பிரதமர் மோடி வரும் 12, 13 ஆகிய தேதிகளில் அமெரிக்க செல்ல உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்பை பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News