இந்தியா
76வது குடியரசு தினம் - தேசிய போர் நினைவு சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை
- நாடு முழுக்க குடியரசு தின விழா கொண்டாட்டம்.
- சிறப்பு படையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நாட்டின் 76-வது குடியரசு தின விழா நாடு முழுக்க கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆளுநர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். மேலும், சிறப்பு அணிவகுப்புகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், குடியரசு தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். போர் நினைவு சின்னத்தில் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றனர்.