இந்தியா

புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி, பிரதமர்

Published On 2025-01-01 02:52 GMT   |   Update On 2025-01-01 02:52 GMT
  • 2025 ஆம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், செழிப்பையும் தரட்டும்!
  • இந்த ஆண்டு அனைவருக்கும் புதிய வாய்ப்புகளையும், வெற்றிகளையும், முடிவில்லாத மகிழ்ச்சியையும் தரட்டும்.

புதுடெல்லி:

நாடு முழுவதும் 2025-ம் புத்தாண்டை பொதுமக்கள் உற்சாக வரவேற்று கொண்டாடி வருகின்றனர். கடற்கரைகள், நட்சத்திர விடுதிகளில் வாண வேடிக்கையுடன் புத்தாண்டு பிறப்பை கொண்டாடினர். மேலும் கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து பதிவில்,

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! 2025 ஆம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், செழிப்பையும் தரட்டும்! இந்தச் சந்தர்ப்பத்தில், இந்தியாவிற்கும் உலகிற்கும் ஒளிமயமான, நிலையான எதிர்காலத்தை உருவாக்க இணைந்து பணியாற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டை புதுப்பிப்போம் என கூறியுள்ளார்.


பிரதமர் மோடி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து பதிவில்,

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

இந்த ஆண்டு அனைவருக்கும் புதிய வாய்ப்புகளையும், வெற்றிகளையும், முடிவில்லாத மகிழ்ச்சியையும் தரட்டும். புத்தாண்டு அனைவருக்கும் அற்புதமான, ஆரோக்கியமான, செழிப்பான ஆண்டாக அமையட்டும் என கூறியுள்ளார். 



Tags:    

Similar News