ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த தினம் - பிரதமர் மோடி வாழ்த்து
- எங்களை நத்திப் பிழைக்க வந்த நீங்கள்தான் எங்களின் தாய் மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டும்
- விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகத் திகழ்ந்தவர்
"எங்களை நத்திப் பிழைக்க வந்த நீங்கள்தான் எங்களின் தாய் மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர, நாங்கள் உங்கள் மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை" என்று ஆங்கிலேயர்களிடம் கர்ஜித்த வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்த தினம் இன்று [ஜனவரி 3]
ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடியவர் வீரமங்கை ராணி வேலு நாச்சியார் [1730 -1796]
இன்று அவரின் 295 வது பிறந்த தினத்தை ஒட்டி தலைவர்கள் பலர் அவருக்கு வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
துணிச்சலான ராணி வேலு நாச்சியாரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன்! காலனித்துவ ஆட்சிக்கு எதிராக அவர் ஒரு வீரப் போராட்டத்தை நடத்தினார், இணையற்ற வீரத்தையும், போர்தந்திர திறமையையும் வெளிப்படுத்தினார்.
ஒடுக்குமுறைக்கு எதிராகவும், சுதந்திரத்திற்காகவும் போராடப் பல தலைமுறைகளை அவர் ஊக்குவித்தார். பெண்களுக்கு அதிகாரமளித்தலிலும் அவரது பங்கு பரவலாகப் பாராட்டப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.