இந்தியா

ராகுல்காந்தி, பிரான்சிஸ்கோ சர்தினா

பாத யாத்திரையை ராகுல் காந்தி நிறுத்த வேண்டும்- காங்கிரஸ் எம்.பி.வேண்டுகோள்

Published On 2022-10-17 15:33 IST   |   Update On 2022-10-17 15:35:00 IST
  • ராகுல்காந்தியின் பாத யாத்திரை கர்நாடகா மாநிலத்தில் நடைபெறுகிறது.
  • காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தமது வாக்கை பதிவு செய்தார் ராகுல்காந்தி

பனாஜி:

காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை யாத்திரைப் பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவரது பாதயாத்திரை தற்போது கர்நாடகா மாநிலம் பல்லாரியை அடைந்துள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல்காந்தி தமது வாக்கை பதிவு செய்தார். பல்லாரியில் அமைக்கப்பட்ட சிறப்பு மையத்தில் அவர் வாக்குப் பதிவு செய்ததாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 


இதனிடையே, ராகுல்காந்தி தமது பாத யாத்திரையை நிறுத்தி வேண்டும் என்று அக்கட்சியின் எம்.பி.யும், கோவா முன்னாள் முதல்வருமான பிரான்சிஸ்கோ சர்தினா வேண்டுகோள் விடுத்துள்ளார். பனாஜியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் ராகுல் காந்தி கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க கூடிய ஒரே கட்சி காங்கிரஸ்தான் என்றும் அவர் குறிப்பிட்டார். கட்சி அடிமட்டத்தில் இருந்து வளர வேண்டும் என்று விரும்புவதாகவும், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூனா கார்கே போட்டியின்றி தேர்வு செய்யப்படும் வகையில் சசிதரூர் போட்டியிடுவதில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags:    

Similar News