இந்தியா

முதல் கணவனிடம் விவாகரத்து பெறாவிட்டாலும் 2வது கணவனிடம் ஜீவனாம்சம் பெற முடியும் - உச்சநீதிமன்றம்

Published On 2025-02-09 10:56 IST   |   Update On 2025-02-09 10:56:00 IST
  • சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல் பரஸ்பர ஒப்பந்தத்தில் மட்டும் கையொப்பமிட்டு முதல் கணவரைப் பிரிந்தார்.
  • நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

முதல் கணவரிடம் விவாகரத்து பெறாவிட்டாலும் இரண்டாம் கணவரிடம் இருந்து பெண்கள் ஜீவனாம்சம் பெற முடியும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தெலுங்கானாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல் பரஸ்பர ஒப்பந்தத்தில் மட்டும் கையொப்பமிட்டு முதல் கணவரைப் பிரிந்தார். பின்னர் வேறொருவரை இரண்டாம் திருமணம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 2 ஆவது கணவா் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது வரதட்சிணை தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்தப் பெண் புகாா் அளித்தார்.

மேலும் தனக்காகவும் தனது மகளுக்காகவும் 2 ஆவது கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் கோரி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் 2ஆவது கணவன் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது.

இதை எதிர்த்து 2 ஆவது கணவன் உயர்நீதிமன்றம் மேல்முறையீடு செய்தார். முதல் கணவரிடம் இருந்து முறையாக விவாகரத்து பெறாதததால் 2 ஆவது கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் பெற முடியாது என கூறி குடும்ப நல நீதிமன்றத்தில் உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக அந்த பெண் உச்சநீதிமன்றம் சென்றார். பெண்ணின் மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு, முதல் கணவரிடம் இருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாவிட்டாலும், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 125 இன் கீழ் 2 ஆவது கணவரிடம் ஜீவனாம்சம் கோர பெண்ணுக்கு உரிமை உள்ளது.

திருமணம் மூலம் கிடைக்கும் ஆதாயங்களை கணவன் அனுபவிக்கும்போது, அதன்மூலம் ஏற்படும் கடமைகளை அவர் தட்டிக்கழிக்க முடியாது. எனவே பெண்ணுக்கு 2ஆவது கணவா் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. 

Tags:    

Similar News