இந்தியா

ஷாக் அடிக்கும் கரண்ட் பில் - உஷாரய்யா உஷார்!

Published On 2025-01-10 11:25 IST   |   Update On 2025-01-10 12:38:00 IST
  • இரண்டு இலக்க எண்களுக்கு பதிலாக கூடுதலாக எண் சேர்க்கப்பட்டதால் இவ்வளவு பெரிய கட்டணம் வந்ததை கண்டுபிடித்தனர்.
  • லலித் திமான் என்பவருக்கு டிசம்பர் 2024 மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.2,10,42,08,405- என வந்தது.

சமீப காலமாக மின் கட்டணம் சிலருக்கு பேரிடியாக விழுந்து விடுகிறது. கடந்த ஆண்டு குஜராத்தில் மாமாவுடன் சேர்ந்து தையல் கடை நடத்தி வரும் முஸ்லிம் அன்சாரிக்கு ரூ.86 லட்சம் மின் கட்டணம் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மின் வாரிய அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து அன்சாரி கடைக்கு வந்து ஆய்வு சோதனை மின் வாரிய அதிகாரிகள் இரண்டு இலக்க எண்களுக்கு பதிலாக கூடுதலாக எண் சேர்க்கப்பட்டதால் இவ்வளவு பெரிய கட்டணம் வந்ததை கண்டுபிடித்தனர்.

இந்த நிலையில், இமாச்சலப் பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில் ஒருவருக்கு சுமார் ரூ.2 பில்லியன் மின் கட்டணம் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

லலித் திமான் என்பவருக்கு டிசம்பர் 2024 மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.2,10,42,08,405- என வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே மின் வாரிய அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தார். இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் தொழில்நுட்பக் கோளாறால் அதிக மின் கட்டணம் பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அவரது மின் கட்டணம் சரிசெய்யப்பட்டு ரூ.4,047 ஆகக் குறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இப்படி மாதம் தோறும் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு மின் கட்டணம் பேரிடியாக விழுவதால் உஷாரய்யா...உஷார்... என்றே எண்ணத் தோன்றுகிறது.

Tags:    

Similar News