இந்தியா

சர்வதேச எல்லையில் சுரங்கங்களை கண்டுபிடித்து அழிக்கும் பணியில் வீரர்கள்

Published On 2024-07-25 13:42 GMT   |   Update On 2024-07-25 13:42 GMT
  • கடந்த ஆறு வாரங்களாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
  • சர்வதேச எல்லையில் சுரங்கம் அமைத்து இந்தியாவுக்குள் ஊடுருவுவதாக தகவல்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக துப்பாக்கிச் சண்டை அதிகரித்த வண்ணம் உள்ளது. பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தும் சம்பவம் அதிகரித்துள்ளது. அவர்களுக்கு உள்ளூர் போலீசார் உடன் இணைந்து பாதுகாப்புப்படையினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக கூடுதல் பாதுகாப்புப்படை வீரர்கள் ஜம்மு-காஷ்மீருக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவுவது பெரும் தலைவலியாக இருக்கிறது. இதனால் சம்பா செக்டாரில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் நுழைய சுரங்கங்கள் உள்ளனவா? என பாதுகாப்புப்படையினர் கண்டுபிடிக்கும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர்.

அடர்ந்த புதர்கள் மற்றும் வனப்பகுதிகளில் கவனம் செலுத்தி ஏராளமான போலீசார் மற்றும் பாதுகாப்புப்படை வீரர்கள் எல்லைப் பகுதிகளை உன்னிப்பாக ஸ்கேன் செய்து வருகின்றனர். இந்த தேடுதல் வேட்டைக்காக டிரோன்களும் குவிக்கப்பட்டுள்ளன.

சுரங்கங்கள் இருப்பதற்கு வாய்ப்புள்ளதாக கருதப்படும் இடங்களில் அடர்ந்த புதர்களை அப்புறப்படுத்தும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் சர்வதேச எல்லை வழியாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குள் ஊடுருவுகிறார்கள். ஊடுருவும் அவர்கள் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபடுகிறார்கள் என போலீசார் தெரிவித்திருந்தனர்.

கடந்த சில மாதங்களில் 50 முதல் 60 பேர் எல்லை வழியாக ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவியிருக்கலாம் என கூறப்படுகின்றன.

கடந்த ஆறு வாரங்களாக பயங்கரவாதிகள் கத்துவா, தோடா, ரஜோரி, பூஞ்ச், ரியாசி மாவட்டங்களில் ராணுவ அதிகாரிகள், பாதுகாப்புப்படையினர், பொதுமக்கள், யாத்ரீகர்கள் ஆகியோரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News