இந்தியா
கோபத்தை தூண்டிய மிட்டாய் தயாரிப்பு- வீடியோ வைரல்
- மிட்டாய் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
- மிட்டாயின் மதிப்பை கெடுத்துவிட்டதாக கண்டன கருத்துகளை பதிவு செய்தனர்.
சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் மிட்டாய், வீடியோ சமூக வலைத்தளவாசிகளின் கோபத்தை தூண்டியுள்ளது. வடமாநிலங்களில் ரேவ்டி என்ற மிட்டாய் நம்மூர் கடலைமிட்டாய் போன்று பிரபலமானது. வலைத்தளங்களில் பரவும் வீடியோவில் மிட்டாய் தயாரிக்கும் தொழிலாளர்கள் தரையில் மாவையும், சர்க்கரை பாகையும், முந்திரிப் பருப்புடன் சேர்ந்து பிசைந்து மிட்டாய் தயாரிப்பில் ஈடுபடும் காட்சி இடம்பெற்று உள்ளது. மேலும் பிசைந்த மாவை சுவற்றில் அடித்து அடித்து மேலும் பக்குவப்படுத்துகிறார்கள். தொழிலாளர்கள் கையுறை கூட அணிந்திருக்கவில்லை.
இப்படி அடிப்படை சுகாதாரம் அற்ற முறையில் தயாரிக்கப்படும் மிட்டாய் பற்றிய வீடியோ காட்சி, வலைத்தளவாசிகளை வருத்தப்பட வைத்தது. மிட்டாய் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மிட்டாயின் மதிப்பை கெடுத்துவிட்டதாக கண்டன கருத்துகளை பதிவு செய்தனர்.