இந்தியா
null

மீனவர் பிரச்சனையில் சுமூக தீர்வு காண வேண்டும்- மோடியிடம் வலியுறுத்திய இலங்கை அதிபர்

Published On 2024-12-16 10:31 GMT   |   Update On 2024-12-16 10:57 GMT
  • மீன்பிடித் தொழிலை பாதிக்கும் நடைமுறைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
  • இந்தியாவிற்கு விரோதமான செயல்பாடுகள் இலங்கையில் நடைபெற ஒருபோதும் இலங்கை அரசு அனுமதிக்காது.

இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இடதுசாரி கட்சியான 'தேசிய மக்கள் சக்தி' கட்சியின் தலைவர் அனுராகுமார திசநாயகா வெற்றி பெற்று இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர், அதிபர் திசநாயகாவை சந்தித்து பேசினார். அப்போது இந்தியா வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.

அதை ஏற்று இலங்கை அதிபர் அனுராகுமார திசநாயகா தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்தார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியை இலங்கை அதிபர் திசநாயகா சந்தித்துப் பேசினார்.

பிரதமர் மோடி உடனான சந்திப்பின்போது மீனவர் பிரச்சனையில் சுமூக தீர்வு காண வேண்டும் என்று இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "இலங்கைக்கு இந்தியா வழங்கிய பொருளாதார உதவிக்கு நன்றி இந்திய வெளியுறவுக் கொள்கையில் இலங்கைக்கு சிறப்பான இடமுண்டு. Bottom Trawling முறையை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதால் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றது. மீன்பிடித் தொழிலை பாதிக்கும் நடைமுறைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

இரு நாடுகளுக்கும் சுமூக தீர்வு ஏற்படும் வகையில் மீனவர் பிரச்சனையில் தீர்வு காண வேண்டும் இந்தியாவிற்கு விரோதமான செயல்பாடுகள் இலங்கையில் நடைபெற ஒருபோதும் இலங்கை அரசு அனுமதிக்காது. இந்தியாவுடனான ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறும் என நான் உறுதியளிக்க விரும்புகிறேன். இந்தியாவுக்கு எங்களின் ஆதரவு தொடரும்" என்று மோடியிடம் தெரிவித்தார்.

Tags:    

Similar News