'பாலஸ்தீனம்' ஞாபகம் இருக்கா.. பையுடன் பாராளுமன்றம் வந்த பிரியங்கா காந்தி - முகம் சுளித்த பாஜக
- இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இன்றைய தேதி வரை 45,028 மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
- இது சரியான சிந்தனையுள்ள ஒவ்வொரு நபரின் தார்மீகப் பொறுப்பாகும்
வயநாடு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி பாலஸ்தீனம் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கைப்பையுடன் பாராளுமன்றத்துக்கு வந்துள்ளதை பாஜக விமர்சித்துள்ளது.
கடந்த 14 மாதங்களாகக் காசா உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்களின்மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இன்றைய தேதி வரை 45,028 மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 70 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐநாவின் அறிக்கை கூறுகிறது. மேலும் இதுவரை106,962 பேர் படுகாயமடைந்துள்ளனர். இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை போர் குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றம் அறிவித்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
ஆனால் போர் மட்டும் நின்றபாடில்லை. சர்வதேச நாடுகளின் அமைதிப் பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. பாலஸ்தீன போரை நிறுத்த உலகெங்கிலும் இருந்து பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரியங்கா காந்தி பலஸ்தீனதுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டின் பெயர் மற்றும் பாலஸ்தீன கோடியின் நிரத்தை குறிக்கும் தர்பூசணி பழம் உள்ளிட்ட குறியீடுகள் இடம்பெற்ற கைப்பையுடன் பாராளுமன்றத்துக்கு வந்த படத்தை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது திங்களன்று (டிசம்பர் 16) தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். முஸ்லிம்களை திருப்திப்படுத்த பிரியங்கா இவ்வாறு செய்துள்ளார் என பாஜக விமர்சித்துள்ளது.
பொதுமக்கள், தாய், தந்தை, மருத்துவர்கள், செவிலியர்கள், உதவிப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் நாளுக்கு நாள் அழிக்கப்படும் ஆயிரக்கணக்கான அப்பாவி குழந்தைகளுக்காகக் குரல் கொடுத்தால் மட்டும் போதாது
வெறுப்பு மற்றும் வன்முறையை, இஸ்ரேலிய குடிமக்கள் உட்பட உலகில் உள்ள ஒவ்வொரு அரசும் இஸ்ரேலிய அரசாங்கத்தின் இனப்படுகொலையைக் கண்டித்து அவர்களை நிறுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும். இது சரியான சிந்தனையுள்ள ஒவ்வொரு நபரின் தார்மீகப் பொறுப்பாகும்," என்று பிரியங்கா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.