சங்கீத கலாநிதி விருது பெயரை பயன்படுத்த இடைக்கால தடை- உச்சநீதிமன்றம்
- சங்கீத கலாநிதி விருதை டி.எம்.கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமி வழங்கி இருக்க கூடாது.
- சீனிவாசனின் மேல்முறையீடு மனுவுக்கு பதிலளிக்க மியூசிக் அகாடமி, பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது பெயரை பாடகர் டி.எம்.கிருஷ்ணா பயன்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசனின் மேல்முறையீடு மனுவுக்கு பதிலளிக்க மியூசிக் அகாடமி, பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இதுதொடர்பான வாதத்தின்போது சங்கீத கலாநிதி விருதை டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கிருப்பது நீதிமன்ற அவமதிப்பு என்றும், சங்கீத கலாநிதி விருதை டி.எம்.கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமி வழங்கி இருக்க கூடாது என்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் வாதம் செய்தார்.
மேலும், சிவில் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் வரை சங்கீத கலாநிதி விருதை டி.எம்.கிருஷ்ணா பயபன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இந்நிலையில், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசனின் மேல்முறையீடு மனுவுக்கு பதிலளிக்க மியூசிக் அகாடமி, பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.