இந்தியா
தமிழக வெள்ள பாதிப்பு- மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது தமிழக எம்.பிக்கள் குழு
- தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக சந்திப்பு.
- சுமார் 37 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்குமாறு வலியுறுத்தல்.
தமிழக எம்.பிக்கள் குழு, மத்திய உள்துறை அமைச்சர் அமிஷ்ஷாவை சந்தித்தனர்.
டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக எம்.பி.க்கள் குழு, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினர்.
அப்போது, தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக மத்திய அரசு, விரைந்து நிவாரணம் வழங்குமாறும், சுமார் 37 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்குமாறும் எம்.பி.க்கள் குழு அமித்ஷாவிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சந்திப்பின்போது, திமுக- டி.ஆர்.பாலு, ம.தி.மு.க- வைகோ, சி.பி.ஐ- சுப்பராயன், சி.பி.எம்.- நடராஜன் உள்ளிட்டோர் அமித்ஷாவுடன் சந்தித்தனர்.
மேலும், விடுதலை சிறுத்தைகள் சட்சி- ரவிக்குமார், ஐ.யு.எம்.எல்- நவாஸ் கனி, கொங்கு நாடு மக்கள் கட்சி- சின்ராஜ் ஆகியோரும் அமித்ஷாவை சந்தித்தனர்.