இந்தியா
இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 6,168 பேருக்கு தொற்று
- கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 9,685 பேர் மீண்டுள்ளனர்.
- இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 55 ஆயிரத்து 365 ஆக உயர்ந்தது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 7,946 ஆக இருந்தது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,168 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 39 ஆயிரத்து 930 ஆக உயர்ந்தது.
தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 9,685 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 55 ஆயிரத்து 365 ஆக உயர்ந்தது. தற்போது 59,210 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது நேற்றை விட 3,538 குறைவு ஆகும். கொரோனா பாதிப்பால் மேலும் 21 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,27,932 ஆக உயர்ந்துள்ளது.