ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஆர்வம்- 60 கிலோ எடையை தூக்கி அசத்தும் 8 வயது சிறுமி
- அரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியை சேர்ந்த சிறுமியின் பெயர் அர்ஸியா கோஸ்வாமி.
- பளுதூக்கும் பயிற்சி மேற்கொண்டு வரும் அர்ஸியா 60 கிலோ எடையை தூக்கி ஒரு சில விநாடிகள் வைத்திருந்து விட்டு பின் கீழே வைக்கிறார்.
சிறுவர்-சிறுமிகளின் திறமைகளை உலகிற்கு வெளிக்காட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் பரவி வரும் ஒரு வீடியோவில் 8 வயது சிறுமி ஒருவர் 60 கிலோ எடையை தூக்கி அசத்தும் வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது.
அரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியை சேர்ந்த அந்த சிறுமியின் பெயர் அர்ஸியா கோஸ்வாமி. ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் பளுதூக்கும் பயிற்சி மேற்கொண்டு வரும் அர்ஸியா 60 கிலோ எடையை தூக்கி ஒரு சில விநாடிகள் வைத்திருந்து விட்டு பின் கீழே வைக்கிறார்.
பின்னர் அவர் கம்பீரமாக நடந்து வரும் வீடியோவை பார்த்த சமூக வலைதள பயனர்கள் அர்ஸியாவை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த சிறுமியின் செயல் இளைஞர்கள் பலருக்கும் நம்பிக்கையையும், உத்வேகத்தையும் கொடுக்கும் என்றும், இவரால் ஒரு நாள் இந்தியா பெருமையடையும் என்றும் சில பயனர்கள் பதிவிட்டுள்ளனர்.
இதுவரை சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். 20 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.