இந்தியா

பீகாரில் போலீஸ் நிலையம் மீது தாக்குதல்- 9 போலீசார் காயம்

Published On 2022-09-18 17:17 IST   |   Update On 2022-09-18 17:17:00 IST
  • பிரான்பூர் போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் ஆயுதங்களுடன் தாக்கியது.
  • போலீஸ் வளாகத்தில் இருந்த வாகனங்களையும் சேதப்படுத்தினர்.

ராஞ்சி:

பீகாரில் 40 வயதான பிரமோத் குமார் சிங் என்பவர் மது பாட்டில்களை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லபபட்ட அவர் காவல் நிலையத்தில் இறந்து கிடந்தார்.

இதைத்தொடர்ந்து பிரான்பூர் போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் ஆயுதங்களுடன் தாக்கியது. போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசரையும் அடித்து உதைத்தனர். போலீஸ் வளாகத்தில் இருந்த வாகனங்களையும் சேதப்படுத்தினர். கும்பல் தாக்கியதில் 9 போலீசார் படுகாயம் அடைந்தனர். அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News