இந்தியா
இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் தினமும் அனுப்புகிறது- மத்திய மந்திரி ஜெய்சங்கர் குற்றச்சாட்டு
- இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்யும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது.
- தினமும் பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் பாகிஸ்தான் அனுப்புகிறது.
புதுடெல்லி:
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்யும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. தினமும் பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் பாகிஸ்தான் அனுப்புகிறது. மும்பையில் உள்ள ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி இருந்தனர்' என்றார்.
காஷ்மீரில் கடந்த 1-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மறுநாள் நடந்த குண்டுவெடிப்பில் குழந்தை உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்துக்கு பிறகு மத்திய மந்திரி ஜெய்சங்கர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.