இந்தியா

வன்முறை நீடிப்பு: மணிப்பூரில் துப்பாக்கி சூடு- ராணுவ வீரர் காயம்

Published On 2023-06-19 09:10 GMT   |   Update On 2023-06-19 09:10 GMT
  • கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கிய வன்முறை இன்னும் முடிந்தபாடில்லை வன்முறை தொடர்ந்து நீடித்து வருகிறது.
  • காண்டோ சபல் கிராமத்துக்குள் நுழைந்த ஒரு கும்பல் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டது.

இம்பால்:

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியின சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது.

கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கிய வன்முறை இன்னும் முடிந்தபாடில்லை வன்முறை தொடர்ந்து நீடித்து வருகிறது. கலவரத்துக்கு இதுவரை 120-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 300- க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பா.ஜனதா மந்திரிகளின் அலுவலகங்களுக்கு தீவைக்கப்பட்டன. புதிய வன்முறை காரணமாக ராணுவ வீரர்கள் கடந்த 2 தினங்களாக கொடி அணிவகுப்பு நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று இரவு காண்டோ சபல் கிராமத்துக்குள் நுழைந்த ஒரு கும்பல் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டது. இதில் ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்தார். அவர் லீமோகாங் ராணுவ மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.கிராம மக்களை குறி வைத்துதான் அந்த கும்பல் தாக்க வந்தது. ராணூவ வீரர்களை பார்த்ததும் அவர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு ஓடிவிட்டனர்.

Tags:    

Similar News