இந்தியா
ஏழுமலையானுக்கு தீப்பெட்டியில் அடங்கும் பட்டு சேலை வழங்கிய நெசவு தொழிலாளி
- பட்டு சேலையை தயார் செய்வதற்கு 15 நாட்கள் ஆனது.
- ரூ.20 லட்சம் மதிப்பில் பட்டு சேலை.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஸ்ரீசில்சை சேர்ந்தவர் நல்ல விஜய். கைத்தறி தொழிலாளி. இவர் நேற்று திருப்பதியில் ஏழுமலையானை தரிசிப்பதற்காக குடும்பத்துடன் வந்தார். அப்போது தீப்பெட்டியில் அடங்கும் அளவு பட்டு சேலையை ஏழுமலையானுக்கு வழங்கினார்.
ஆண்டுதோறும் வெமுல வாடாவில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மனுக்கும், ஏழுமலையானுக்கும் தீப்பெட்டியில் அடங்கும் அளவு பட்டு சேலைகளை நெய்து வழங்குவது வழக்கம்.
200 கிராம் தங்கம் மற்றும் வெள்ளியில் 5½ மீட்டர் நீளமும், 48 அடி அங்குலத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் பட்டு சேலை வழங்கியதாக தெரிவித்தார். இந்த பட்டு சேலையை தயார் செய்வதற்கு 15 நாட்கள் ஆனது என்றார்.