இந்தியா

காங். தலைவர் பதவிக்கு கார்கே போட்டி- ப.சிதம்பரம் மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் ஆகிறார்

Published On 2022-10-01 14:17 IST   |   Update On 2022-10-01 14:17:00 IST
  • தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜூன கார்கே தற்போது மேல்சபை எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.
  • மல்லிகார்ஜூன கார்கே தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.

புதுடெல்லி:

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே போட்டியிருகிறார். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை உள்ளது. தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜூன கார்கே தற்போது மேல்சபை எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.

இதையடுத்து இந்த பதவியை பிடிக்க காங்கிரசில் போட்டி ஏற்பட்டு உள்ளது. முன்னாள் மத்திய நிதி மந்திரியும் மேல்சபை எம்.பியுமான ப.சிதம்பரத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படலாம் என தெரிகிறது. அதே சமயம் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட மத்தியபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், எம்.பி.யுமான திக்விஜய் சிங் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகி கார்கேவுக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் அவர் எதிர்க்கட்சி தலைவர் ஆவாரா? என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. யாருக்கு இந்த பதவியை கொடுக்கலாம் என்பது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தி வருகிறது.

Tags:    

Similar News