இந்தியா
காவிரி பிரச்சனையில் இந்தியா கூட்டணி கட்சிகள் சண்டை போட்டு வருகின்றன: பிரதமர் மோடி கடும் தாக்கு
- குஜராத்தில் நதி நீர் பிரச்சனை தொடர்பாக, இதுவரை எந்தவித பிரச்சனையும் எழவில்லை.
- ராஜஸ்தான் முதல்-மந்திரி தனது பதவியை காப்பாற்றுவதில் தான் குறியாக உள்ளார்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக இரு மாநிலங்கள் சண்டை போட்டு வருகின்றன. எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணிக்குள் உள்ள இரு ஆளும் கட்சிகளுக்கு இடையே காவிரி பிரச்சனைக்காக மோதி வருகிறார்கள் . குஜராத்தில் நதி நீர் பிரச்சனை தொடர்பாக, இதுவரை எந்தவித பிரச்சனையும் எழவில்லை.
ராஜஸ்தான் மாநிலத்தை கடந்த 5ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு சீரழித்து விட்டது. குற்றங்கள் இங்கு அதிகமாக நடப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டது. இதற்காகவா நீங்கள் காங்கிரசுக்கு ஓட்டு போட்டீர்கள். ராஜஸ்தான் முதல்-மந்திரி தனது பதவியை காப்பாற்றுவதில் தான் குறியாக உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.