திருமணமாகி 2 ஆண்டுகளுக்கு பிறகு லாட்ஜில் உல்லாசம் அனுபவித்து விட்டு இளம்பெண் காதலனுடன் தற்கொலை
- கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுஷா கிருஷ்ணராவ் இருவரும் தலைமறைவானார்கள்.
- பல்வேறு இடங்களில் அனுஷாவை தேடிய அவரது குடும்பத்தினர் அவர் காணாமல் போனதாக கோவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் கிருஷ்ணாராவ் (வயது 21) கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த அனுஷா (21) இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.
வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் அனுஷாவுக்கு அதே மாவட்டத்தை சேர்ந்த பாபு (27) என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் அனுஷாவுக்கு துளி கூட விருப்பமில்லை.
கணவருடன் இருந்தாலும் தனது காதலனுடன் அடிக்கடி அனுஷா செல்போனில் பேசி வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுஷா கிருஷ்ணராவ் இருவரும் தலைமறைவானார்கள். பல்வேறு இடங்களில் அனுஷாவை தேடிய அவரது குடும்பத்தினர் அவர் காணாமல் போனதாக கோவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணாராவ், அனுஷா இருவரும் திருப்பதி வந்தனர். கோவிந்தராஜ சாமி கோவில் வடக்கு மாடவீதியில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அவர்கள் தங்கி இருந்தனர். இருவரும் லாட்ஜில் கணவன், மனைவி போல உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த இருவரும் நேற்று லாட்ஜில் உள்ள அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பதி கிழக்கு போலீசார் லாட்ஜிக்கு சென்று 2 பேர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் கள்ளக்காதல் ஜோடி என்பது தெரிய வந்தது. இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.