இந்தியா

கொலம்பியா பெண்ணுடன் தெலுங்கானா வாலிபருக்கு திருமணம்

Published On 2025-03-07 10:54 IST   |   Update On 2025-03-07 10:54:00 IST
  • சாய் சைதன்யாவின் பெற்றோர் மற்றும் ரியாவின் பெற்றோர் காதல் திருமணத்திற்கு ஒப்புதல் அளித்தனர்.
  • வீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், கே.சமுத்திரத்தை சேர்ந்தவர் ராஜேஷ் யாதவ். இவரது மகன் சாய் சைதன்யா. இவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மேல் படிப்பு படிப்பதற்காக ஆஸ்திரேலியா நாட்டிற்குச் சென்றார்.

பட்டப்படிப்பு முடித்து பின்னர் அங்குள்ள நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை செய்து வந்தார்.

அப்போது தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவை சேர்ந்த ரியா என்பவருடன் சாய் சைதன்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சாய் சைதன்யாவின் பெற்றோர் மற்றும் ரியாவின் பெற்றோர் காதல் திருமணத்திற்கு ஒப்புதல் அளித்தனர்.

அதன்படி நேற்று அமினாபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் சாய் சைதன்யா மற்றும் ரியா திருமணம் இந்து முறைப்படி பிரமாண்டமான முறையில் நடந்தது.

இரு வீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News