இந்தியா

தேர்வு ஆணைய ஆபீசில் பியூன் வேலை செய்த இளைஞர் தேர்வில் வென்று உதவி ஆணையரான நெகிழ்ச்சி சம்பவம்

Published On 2024-12-06 20:26 IST   |   Update On 2024-12-06 20:26:00 IST
  • CGPSC-2023 தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது
  • ராய்ப்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) பி டெக் (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்) படித்தவர்.

கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற ஒரு பியூன் கடினமான சத்தீஸ்கர் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (CGPSC) தேர்வில் வெற்றி பெற்று இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்.

கடந்த ஏழு மாதங்களாக தலைநகர் ராய்பூரில் உள்ள CGPSC அலுவலகத்தில் பியூனாக பணிபுரியும் 29 வயதான பட்டியலின விவசாய குடும்பத்தை இளைஞர் சைலேந்திர குமார் பந்தே, தனது ஐந்தாவது முயற்சியில் சத்தீஸ்கர் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, இப்போது மாநில வரித்துறையில் உதவி ஆணையராக நியமிக்கப்படுகிறார்.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட CGPSC-2023 தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், பொதுப் பிரிவில் 73 வது ரேங்க் மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவில் 2 வது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றார்.

ராய்ப்பூரில் பள்ளிப்படிப்பை முடித்த சைலேந்திர குமார்,  அங்குள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) பி டெக் (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்) படித்தவர்.

ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் பொறியியல் பட்டம் பெற்ற பிறகு, பந்தே தனியார் துறையில் நல்ல சம்பளத்தில் வேலைக்கு செல்லாமல் ஒரு அரசாங்க ஊழியராக ஆசைப்பட்டதால் தேர்வுக்கு படித்து வந்தார். ஆனால் குடும்பத்தை சூழலை கடந்த காரணமாக கடந்த மே மாதம் முதல் அரசு அலுவலகத்தில் பியூன் வேலை பார்த்து வந்துள்ளார்.

Tags:    

Similar News