இந்தியா
நாடாளுமன்றத்தில் வரும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
- பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31ம் தேதி தொடங்குகிறது.
டெல்லியில் நாடாளுமன்றத்தில் வரும் பிப்ரவரி 1ம் தேதி அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதன்மூலம், தொடர்ந்து எட்டு பட்ஜெட்களை தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்கிற பெருமையை பெறுகிறார் நிர்மலா சீதாராமன்.
முன்னதாக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெறுகிறது.