இந்தியா

சாகும் முன் செய்ய வேண்டியவை.. அட்டவணை போட்டு தற்கொலை செய்த பெங்களூரு ஐ.டி. ஊழியர்

Published On 2024-12-11 08:29 GMT   |   Update On 2024-12-11 08:29 GMT
  • தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் பொய் வழக்குகளைப் போட்டுள்ளனர்
  • என் மீதான வழக்குகளைத் தீர்த்து வைக்க நீதிபதி ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்பதாகவும் குற்றம் சாடியிருக்கிறார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான அதுல் சுபாஷ் என்ற ஐடி ஊழியர் கடந்த திங்களன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீஸ் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் நிலையில் சுபாஷ் தற்கொலையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன.

24 பக்க தற்கொலைக் குறிப்பை விட்டுவிட்டு, கிட்டத்தட்ட 90 நிமிட வீடியோவைப் பதிவு செய்துவைத்து அவர் தற்கொலை செய்துள்ளார். அந்த பதிவில், தன் மீதும் தனது குடும்பத்தினர் மீது தனது மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

 

மேலும் மனைவி மற்றும் மகனுக்குப் பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.2 லட்சம் வழங்கவேண்டும் என்று தன்னை அவர்கள் வற்புறுத்துவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் உத்தர பிரதேச ஜான்பூர் நீதிமன்ற நீதிபதி, என் மீதான வழக்குகளைத் தீர்த்து வைக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

தூக்கிட்டு தற்கொலை செய்வதற்குப் பலமாதங்களாகத் திட்டமிட்டுள்ள சுபாஷ், இறப்பதற்கு முந்தைய தினம், இறக்கும் தினம், இறப்பதற்கு முன் என மூன்று காலங்களாக பிரித்துத் தான் செய்ய வேண்டிய அனைத்து விஷயங்களையும் அட்டவணையாகப் பட்டியல் போட்டு அதை வீட்டின் சுவர் மீது மாட்டி வைத்துள்ளார். அதில் உள்ளவற்றை முடித்தன் அடையாளமாக வரிசையாக டிக் செய்து அவர் குறித்து வைத்துள்ளார்.

 

அந்த அட்டவணையில் தனது போனில் உள்ள கைரேகை பாஸ்வேர்டை அகற்றுவது, கார், பைக் மற்றும் ரூம் சாவிகளை குளிர்சாத பிரிட்ஜ் உள்ளே வைப்பது, ஆபீஸ் வேலையை முடித்து கம்பெனி லேப்டாப், சார்ஜரை அவர்களிடம் ஒப்படைப்பது போன்றவை குறிக்கப்பட்டு அதை முடிந்ததன் அடையாளமாக அதில் டிக் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தனது சேமிப்பை பாதுகாப்பு செய்வது, இறப்பதற்கு முன் குளிப்பது, தற்கொலை கடிதத்தை மேஜை மேல் வைப்பது வரை அதில் குறித்துவைத்து அனைத்தையும் முடித்துவிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.   


தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும்.

Tags:    

Similar News