இந்தியா
டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழக கவர்னர் சந்திப்பு
- பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
- மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட மத்திய மந்திரிகளை கவர்னர் ஆர்.என்.ரவி சந்திக்கவும் வாய்ப்பு உள்ளது.
புதுடெல்லி:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 4 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் காலை டெல்லி புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார். பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. தமிழக அரசுக்கும், கவர்னருக்கும், இடையே நிலுவையில் உள்ள பல்வேறு அம்சங்கள் குறித்தும் கவர்னர் எடுத்துரைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
ஜனவரி 6-ந்தேதி கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்று உள்ளது.
மேலும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட மத்திய மந்திரிகளை கவர்னர் ஆர்.என்.ரவி சந்திக்கவும் வாய்ப்பு உள்ளது.