இந்தியா
ரெயில் பயணிகளின் கவனத்தை ஈர்த்த திருநங்கை- வீடியோ வைரல்
- விமான பணிப்பெண்கள் அறிவிப்பு வெளியிடுவதை போல பயணிகள் ரெயிலில் திருநங்கை ஒருவர் அறிவிப்புகளை வழங்குகிறார்.
- வீடியோ 90 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.
மும்பையில் பயணிகள் ரெயில்களை தினமும் பல லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பயணிகள் ரெயிலில், விமான பணிப்பெண் போல திருநங்கை ஒருவர் அறிவிப்புகளை வெளியிடும் நகைச்சுவையான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தேவி வகேலா என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், விமான பணிப்பெண்கள் அறிவிப்பு வெளியிடுவதை போல பயணிகள் ரெயிலில் திருநங்கை ஒருவர் அறிவிப்புகளை வழங்குகிறார். அவர், 'ஹலோ.. எங்கள் ரெயில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினசுக்கு வர உள்ளது. உங்கள் சீட் பெல்ட்டை அவிழ்த்துவிட்டு கீழே இறங்குங்கள்' என கூறுகிறார்.
இந்த வீடியோ 90 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று நெட்டிசன்களை கவர்ந்துள்ளது. ஒரு பயனர், பல முகங்களில் புன்னகையை வரவழைத்ததற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிப்பது இனிமையானது என பதிவிட்டுள்ளார்.