இந்தியா

VIDEO: ரெயில் இன்ஜின் மேல் குதித்து தற்கொலை செய்த நபர்.. உடல் கருகி உயிரிழந்த பரிதாபம்

Published On 2024-12-07 05:53 GMT   |   Update On 2024-12-07 05:53 GMT
  • நடைமேடை 1 க்குள் ரெயில் நுழைந்ததும் அந்த நபர் மேலிருந்து குதித்தார்
  • ரெயில்வே போலீஸ் அதிகாரி நயீம் மன்சூரி விளக்கம் அளித்தார்

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் நேற்று [வெள்ளிக்கிழமை] கோவா நோக்கிச் சென்ற 12780 ஹஸ்ரத் நிஜாமுதீன்-வாஸ்கோடகாமா ரெயிலின் இன்ஜின் மீது குதித்த நபர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார்.

ஜான்சி ரெயில் நிலையத்தின் நடைமேடை 1 க்குள் ரெயில் நுழைந்ததும் அந்த நபர் நடைமேடையில் போடப்பட்டிருந்த தகர கொட்டகையில் இருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது.

 

ரெயில் இன்ஜின் மேல் உள்ள மின் கம்பியில் விழுந்த அந்த நபரின் உடல் தீயில் எரியும் பதறவைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. மின்கம்பி மூடப்பட்டு அந்த நபரின் உடலை மீட்டு ரெயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜான்சி ரயில் நிலையத்திலேயே அந்த ரெயில் 45 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. இந்த விவகாரம் குறித்துப் பேசிய ரெயில்வே போலீஸ் அதிகாரி நயீம் மன்சூரி, பலியானவரை அடையாளம் காண முடியவில்லை என்றும் ஆனால் அவருக்கு 40 முதல் 45 வயது வரை இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். 

தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும்.

Tags:    

Similar News