இந்தியா

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

பாகிஸ்தானை போரில் வீழ்த்திய வெற்றி தினம்- ராணுவ வீரர்களின் துணிச்சலுக்கு குடியரசு தலைவர் பாராட்டு

Published On 2022-12-16 05:31 GMT   |   Update On 2022-12-16 08:48 GMT
  • பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்று 51 ஆண்டுகள் நிறைவு.
  • வீரர்களின் இணையற்ற துணிச்சல் ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கமளிக்கிறது.

1971-ம் ஆண்டு நடந்த போரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றியின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16-ந் தேதி வெற்றி தினம் (விஜய் திவஸ்) கொண்டாடப்படுகிறது. இந்த போருக்கு பின்னர் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த வங்காளதேசம், சுதந்திர நாடாக மாறியது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்று இன்றுடன் 51 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

இதையொட்டி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 1971 ஆண்டு போரின் போது நமது ஆயுத படையினர் வெளிப்படுத்திய வீரத்தை நன்றியுடன் நினைவு கூறுகிறோம். வீரர்களின் இணையற்ற துணிச்சல் மற்றும் தேசத்துக்காக அவர்கள் செய்த ஒவ்வொரு இந்தியருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News