இந்தியா

அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் வாக்களியுங்கள்- பிரதமர் மோடி

Published On 2024-04-19 07:26 IST   |   Update On 2024-04-19 07:26:00 IST
  • நாடு முழுவதும் இன்று 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.
  • ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது!

மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி அனைவரும் வாக்களிக்க வருமாறு குடிமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது! 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News