இந்தியா

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.

Published On 2025-01-24 19:45 IST   |   Update On 2025-01-24 19:45:00 IST
  • நாளை எனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறேன்.
  • இந்த முடிவு முற்றிலும் என்னுடைய தனிப்பட்ட முடிவு. எந்த நெருக்கடியும் இல்லை.

ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் விஜயசாய் ரெட்டி. இவர் நாளை தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு பதவியில் கூறியிருப்பதாவது:-

நான் அரசியலில் இருந்து விலகப் போகிறேன். நாளை எனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறேன். நான் எந்தவொரு அரசியல் கட்சியிலும் இணையமாட்டேன். எந்தவொரு பதவி, ஆதாயம் அல்லது பணத்திற்கு ஆசைப்பட்டு ராஜினாமா செய்யவில்லை. இந்த முடிவு முற்றிலும் என்னுடைய தனிப்பட்ட முடிவு. எந்த நெருக்கடியும் இல்லை. என் மீது யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது.

ஆந்திர மாநிலத்தில் ஒய்.ஆர்.எஸ். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விஜயசாய் ரெட்டி பார்க்கப்படுகிறார். இது அவருடைய 2-வது மாநிலங்களவை உறுப்பினர் பதவியாகும்.

Tags:    

Similar News