இந்தியா-இங்கிலாந்து மோதும் கிரிக்கெட் போட்டியை பார்க்க ஆன்லைனில் போலி டிக்கெட்களை வாங்கி ஏமாந்த இளைஞர்கள்
- டி20 தொடரின் 2-வது போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 25-ந் தேதி நடக்கிறது.
- எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
இந்தியா வருகை தரும் இங்கிலாந்து அணியினர், வருகிற 22-ந் தேதி முதல் பிப்., 12-ந் தேதி வரை, 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றனர்.
டி20 தொடரின் 2-வது போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 25-ந் தேதி நடக்கிறது. இப்போட்டியை நேரில் பார்ப்பதற்கு, புதுச்சேரி தட்டாஞ்சாவடி, சுப்பையா நகரைச் சேர்ந்த சக்தி என்பவர், ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தார்.
மேலும் தனது நண்பர்கள் 3 பேருக்கு டிக்கெட் பதிவு செய்து அதற்கான தொகை 6,360 ரூபாய் செலுத்தினார். ஆனால் பதிவு செய்யப்பட் டிக்கெட் ஏதும் வரவில்லை.
இது தொடர்பாக சக்தி புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணையில், சைபர் கிரைம் மோசடி கும்பல் கிரிக்கெட் போட்டிக்கான போலியாக டிக்கெட் புக்கிங் இணையதள பக்கத்தை உருவாக்கி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதன் மூலம் எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என விசாரணை நடத்தி வருகின்றனர்.