செய்திகள்
மாநில கைப்பந்து: லயோலா, ஜேப்பியார் அணிகள் சாம்பியன்
மாநில கைப்பந்து போட்டியில் லயோலா கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி இறுதிப்போட்டியில் 29-31, 28-26, 22-25, 28-26, 15-11 என்ற கணக்கில் செயின்ட் ஜோசப்ஸ் அணியை போராடி வென்றது.
ஜாலி கைப்பந்து கிளப் சார்பில் மேன்டேட்டர் ஸ்பெஷலிஸ்ட், பனிமலர் என்ஜினீயரிங் கல்லூரி, அரிமா சங்கம் (342-ஏ4) ஆகியவை ஆதரவுடன் கல்லூரிகள் இடையேயான மாநில அளவிலான கைப்பந்து போட்டி மறைமலைநகரில் நடந்தது. செங்கல்பட்டு எம்.எல்.ஏ வரலட்சுமி மதுசூதனன் இந்தப் போட்டியை தொடங்கி வைத்தார்.
ஆண்கள் பிரிவில் லயோலா கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி இறுதிப்போட்டியில் 29-31, 28-26, 22-25, 28-26, 15-11 என்ற கணக்கில் செயின்ட் ஜோசப்ஸ் அணியை போராடி வென்றது. பெண்கள் பிரிவில் ஜேப்பியார் என்ஜினீயரிங் கல்லூரி 25-16, 25-20 என்ற நேர்செட் கணக்கில் பனிமலர் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு நீதிபதி மோகன் அலங்காமணி பரிசு வழங்கினார். ஆண்கள் அணிக்கு ஒ.என்.ஜி.சி. கோப்பையும், பெண்கள் அணிக்கு டி.ஆர்.எஸ்.கோப்பையும் வழங்கப்பட்டது. ஒ.என்.ஜி.சி. தொழிற்சங்க பொதுச்செயலாளர் கோபிநாதன், இந்திய கைப்பந்து சம்மேளன இணை செயலாளர் நடராஜன், ஜாலி கைப்பந்து கிளப் தலைவர் அரிமா கே.சுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்குமார் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.