செய்திகள்
டி.என்.பி.எல்.: காரைக்குடி காளையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் காரைக்குடி காளையை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் ஐந்தாவது போட்டி திண்டுக்கல்லில் இன்று நடைபெற்றது. மதியம் 2.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - காரைக்குடி காளை அணிகள் மோதின.
டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வீரர்கள் அதிரடியாக விளையாடியதால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது.
வி்க்கெட் கீப்பர் கோபிநாத் அதிகபட்சமாக 26 பந்தில் 43 ரன்களும், கேப்டன் சதீஷ் 22 பந்தில் 46 ரன்களும் விளாசினார்.
பின்னர் 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி காளை அணியின் ஸ்ரீகாந்த் அனிருதா, எம். விஜய் குமார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அனிருத் 7 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார்.
அதன்பின் ராஜ் குமார் உடன் சீனிவாசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது. இதனால் ஓவருக்கு சராசரியாக 10 ரன்களுக்கு மேல் அடித்தனர். காரைக்குடி காளை 6.3 ஓவரில் 70 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது.
விஜய்குமார் 20 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 46 ரன்கள் குவித்து அலெக்சாண்டர் பந்தில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க காரைக்குடி காளை அணி தோல்வியை நோக்கி சென்றது.
சீனிவாசன் 38 ரன்கள் எடுத்து 8-வது விக்கெட்டாக ஆட்டம் இழந்தார். கடைநிலை விக்கெட்டுக்களை அந்தோணி தாஸ் வீழ்த்த காரைக்குடி காளை அணி 17.1 ஓவர்களில் 128 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது.
இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. அந்த அணியின் அந்தோணி தாஸ் 4 விக்கெட்டும், அலெக்சாண்டர் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.