செய்திகள்

ஹர்பஜன்சிங் தான் எனது நம்பர் ஒன் எதிரி: பாண்டிங்

Published On 2016-09-06 07:27 IST   |   Update On 2016-09-06 07:27:00 IST
ஹர்பஜன்சிங் தான் எனது நம்பர் ஒன் எதிரி என்று பாண்டிங் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். அது என்னவென்று கீழே படிக்கலாம்.
புதுடெல்லி :

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இந்தியாவுக்கு எதிராக நான் விளையாடிய போட்டிகளில் எனது பிரதான எதிரியாக சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் இருந்தார். இப்போதும் அவரை நினைத்தாலே எனக்கு உதறல் எடுக்கிறது’ என்றார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் பாண்டிங்கை அதிக முறை ஆட்டம் இழக்கச் செய்தவர் ஹர்பஜன்சிங் தான். அவரது பந்து வீச்சில் 10 முறை அவுட் ஆகி இருக்கிறார்.

Similar News