செய்திகள்

ஜான்டி ரோட்சுக்கு விநாயகர் சதுர்த்தி விருந்து அளித்து உபசரித்த சச்சின்

Published On 2016-09-06 20:16 IST   |   Update On 2016-09-06 20:16:00 IST
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஜான்டி ரோட்ஸ், யுவராஜ் சிங் ஆகியோரை வீட்டிற்கு அழைத்து சச்சின் தெண்டுல்கர் உபசரித்தார்.
நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக விநாயகர் சதுர்த்தி விழா வட இந்தியாவில் விமரிசையாக கொண்டாடப்படும். மும்பையில் வசித்து வரும் சச்சின் தெண்டுல்கரும் நேற்று உற்சாகத்துன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார்.



அவர் தனது வீட்டில் விநாயகர் சிலைகளை வைத்து அதற்கு பூஜை செய்தார். இந்த பூஜையில் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், உலகின் தலைசிறந்த பீல்டருமான ஜான்டி ரோட்ஸ் கலந்து கொண்டார். அவருடன் யுவராஜ் சிங்கும் கலந்து கொண்டார்.

ஜான்டி ரோட்ஸ் சச்சின் வீட்டில் பூஜை அறைகளை போட்டோ எடுத்துக் கொண்டார்.



இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸ் இருந்து வருகிறார். சச்சின் அந்த அணிக்காக விளையாடும்போது ரோட்ஸ் உடன் அவருக்கு நல்ல நட்பு உண்டானது. அதனடிப்படையில் ரோட்ஸ் சச்சின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

Similar News