செய்திகள்

2-வது ஒருநாள் போட்டி: பாகிஸ்தான் தொடரை வென்றது - வெஸ்ட்இண்டீஸ் மீண்டும் தோல்வி

Published On 2016-10-03 09:49 IST   |   Update On 2016-10-03 09:49:00 IST
2-வது ஒருநாள் போட்டி பாகிஸ்தான் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது
ஷார்ஜா:

பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஷார்ஜாவில் நேற்று பகல்- இரவாக நடந்தது.

‘டாஸ்’ வென்ற பாகிஸ் தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப் பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 337 ரன் குவித்தது.

பாபர் ஆசம் சதம் அடித்தார். அவர் கடந்த போட்டியிலும் செஞ்சூரி (120 ரன்) அடித்து இருந்தார். பாபர் ஆசம் 126 பந்தில் 123 ரன்னும் (9 பவுண்டரி, 1 சிக்சர்). சோயிப் மாலிக் 84 பந்தில் 90 ரன்னும் (3 பவுண்டரி, 6 சிக்சர்), சர்பிராஸ் அகமது 47 பந்தில் 66 ரன்னும் (7 பவுண்டரி) எடுத்தனர். ஹோல்டர், ஜோசப் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

பின்னர் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணியால் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 278 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் பாகிஸ்தான் 59 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிராவோ 61 ரன்னும், சாமுவேல்ஸ் 57 ரன்னும் எடுத்தனர். வகாப் ரியாஸ் 2 விக்கெட்டும், இமாத் வாசிம், முகமது அமீர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்த அணி ஏற்கனவே முதல் போட்டியில் 111 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. ஏற்கனவே 20 ஓவர் தொடரை இழந்த வெஸ்ட்இண்டீஸ் தற்போது ஒருநாள் தொடரையும் இழந்து பரிதாப நிலையில் இருக்கிறது.

இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அபுதாபியில் நாளை நடக்கிறது.

Similar News