செய்திகள்

கொல்கத்தா ஆடுகளம் பேட்டிங்குக்கு சவாலானது: ரோகித் சர்மா

Published On 2016-10-03 11:50 IST   |   Update On 2016-10-03 11:50:00 IST
கொல்கத்தா ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது சவாலானது என ரோகித் சர்மா கூறியுள்ளார்.
கொல்கத்தா டெஸ்டில் 2-வது இன்னிங்சில் ரோகித் சர்மாவின் பேட்டிங் அபாரமாக இருந்தது. அவர் 132 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன் 82 ரன்கள் எடுத்தார். விருத்திமான் சகாவும், அவரும் இணைந்து 6-வது விக்கெட்டுக்கு 103 ரன் எடுத்தது சிறப்பு அம்சமாகும்.

தனது ஆட்டம் குறித்து ரோகித் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-

சகாவும், நானும் இணைந்து 103 ரன் எடுத்தது மிகவும் முக்கியமானது. இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது சவாலானது. ஆடுகளம் சீரற்ற முறையில் இருந்தது. விக்கெட்டுகள் சரிந்ததால் நான் ஒவ்வொரு ஜோடியுடன் இணைந்து நிதானமாக ஆடினேன். எனக்கு எந்தவித நெருக்கடியும் இல்லை. நான் எப்போதும் போல இயல்பாகவே விளையாடுகிறேன்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Similar News