செய்திகள்
மான்செஸ்டர் அணி வரும் சீசனில் சிறப்பாக விளையாடும்: ஜோஸ் மவுரினோ நம்பிக்கை
இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணி சிறப்பாக விளையாடும் என பயிற்சியாளர் மவுரினோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
போர்ச்சுக்கலை சேர்ந்த ரோஸ் மவுரினோ கடந்த ஆண்டு மான்செஸ்டர் அணியின் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார். இவரது தலைமையில் மான்செஸ்டர் யுனைடெட் அணி லீக் கோப்பை, ஐரோப்பா லீக் ஆகிய கோப்பைகளை கைப்பற்றியது. ஆனால், இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரில் 6-வது இடத்தையே பிடித்தது.
இந்த முறை மான்செஸ்டர் யுனைடெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரோஸ் மவுரினோ கூறுகையில் ‘‘எங்களால் வெற்றி பெற முடியுமா? என்றால் எங்களால் முடியும். எங்கள் அணி சிறந்ததாகவும், வலுவானதாகவும் இருக்கிறது. ஆனால், மற்ற கிளப்புகளும் அதிக வலுவாக உள்ளது. ஆகவே, வரும் சீசன் மிகவும் கடினமாக இருக்கும்.
பொதுவாகவே, ஒரு அணிக்கு பயிற்சியாளராக சென்றபின் முதல் தொடரை விட இரண்டாவது சீசன் சிறந்ததாக இருக்கும். ஏனென்றால், கிளப்பைப் பற்றி தெரிந்திருக்கும். வீரர்களை பற்றி தெரிந்திருக்கும். வீரர்களுக்கும் என்னைப் பற்றி தெரிந்திருக்கும்’’ என்றார்.
54 வயதாகும் ஜோஸ் மவுரினோ பென்பிகா, போர்ட்டோ, செல்சியா, ரியல் மாட்ரிட் அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார்.