செய்திகள்
ஐ.பி.எல்.-ஐ தொடர்ந்து பிக் பாஷ் லீக்கில் இடம் பிடித்து ரஷித் கான் சாதனை
ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் ஐ.பி.எல். தொடரைத் தொடர்ந்து பிக் பாஷ் லீக் தொடரிலும் இடம்பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உச்சக்கட்ட உள்நாட்டு போர் நடைபெற்ற போதிலும், வீரர்கள் தயங்காமல் கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டனர். உள்நாட்டில் போதிய வசதி இல்லாத காரணத்தில், இந்தியா போன்ற நாடுகளை சொந்த மைதானமாக கொண்டு பயிற்சி எடுத்தது.
தங்களது தீவிர முயற்சியின் காரணமாக கிரிக்கெட் போட்டியில் நல்ல முன்னேற்றம் அடைந்தது. இதன் காரணமாக ஐ.சி.சி.யின் முழு உறுப்பினராகி டெஸ்ட் போட்டியில் விளையாடும் அந்தஸ்தை பெற்றுள்ளது.
குறிப்பாக அந்த அணியின் இளம் வீரரான சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் கடின முயற்சியால் மிகப்பெரிய வளர்ச்சியடைந்துள்ளார். இந்தியாவில் நடைபெற்ற இந்த வருடத்திற்கான ஐ.பி.எல். தொடரில் இடம்பிடித்தார். முதன்முறையாக ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஏலத்தில் விடப்பட்டனர். இதில் சுமார் 3 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து ஐதராபாத் அணி ரஷித் கானை ஏலம் எடுத்திருந்தது.
ஐதராபாத் அணிக்காக களம் இறங்கிய ரஷித் கான் தனது மாயாஜால பந்து வீச்சால் கலக்கினார். இதனால் முன்னணி வீரராக திகழ்ந்தார். அதன்பின் கரீபியன் பிரிமீயர் லீக் தொடர் பங்கேற்றார்.
தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் பிக் பாஷ் லீக் தொடருக்கான அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் பிக் பாஷ் லீக்கில் இடம்பெறும் முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ள ரஷித் கான் கூறுகையில் ‘‘அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். கிரிக்கெட்டின் மிகப்பெரிய லீக் தொடரில் இடம்பிடித்திருப்பதை மிப்பெரிய கவுரமாக கருதுகிறேன்.
பிக் பாஷ் லீக்கில் விளையாடும் முதல் ஆப்கானிஸ்தான் வீ்ரர் என்பதில் கூடுதல் கவுரவம். அணி வீரர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார்.