செய்திகள்

மும்பையில் நடை மேம்பாலங்களை சீரமைக்க எம்.பி. நிதியில் இருந்து ரூ.2 கோடி வழங்கிய சச்சின்

Published On 2017-10-24 12:21 GMT   |   Update On 2017-10-24 12:21 GMT
மும்பையில் ரெயில்வே நடை மேம்பாலங்களை சீரமைப்பதற்கு 2 கோடி ரூபாயை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எம்.பி. சச்சின் டெண்டுல்கர் ஒதுக்கீடு செய்துள்ளார்.
மும்பை:

மும்பையில் உள்ள ரெயில்வே நடை மேம்பாலத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 29-ம் தேதி திடீரென ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர். எல்ப்கின்ஸ்டோன் சாலை மற்றும் பாரல் ரெயில் நிலையத்தை இணைக்கும் பாலத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. அது மும்பைவாசிகளுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியது.



அந்த துயர சம்பவத்தை அடுத்து, மும்பையில் உள்ள ரெயில்வே நடை மேம்பாலங்களை சீரமைப்பதற்காக சச்சின் டெண்டுல்கர் தனது எம்.பி. மேம்பாட்டு நிதியில் இருந்து 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். இதுகுறித்து ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் மற்றும் மும்பை புறநகர் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சச்சின் தனது கடிதத்தில், 'இந்த விபத்தில் சிக்கியவர்களின் குடும்பம் தீபாவளியை கொண்டாட வில்லை. அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை நாம் செய்ய வேண்டும். இது போன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.

Similar News