செய்திகள்
ஷஷாங்க் மனோகர் ஐசிசி சேர்மனாக போட்டியின்றி மீண்டும் தேர்வு
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரான ஷஷாங்க் மனோகர் ஐசிசி சேர்மனாக போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #ICC #ShashankManohar
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் ஷஷாங்க் மனோகர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஐசிசி சேர்மனாக பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் தற்போது முடிவடைந்ததையொட்டி மீண்டும் சேர்மன் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் மீண்டும் ஐசிசி சேர்மனாக ஷஷாங்க் தேர்வு செய்யப்பட்டார்.
மீண்டும் சேர்மனாக தேர்வானது குறித்து ஷஷாங்க் மனோகர் கூறுகையில் ‘‘ஐசிசி சேர்மனாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டது கவுரமானது. தொடர்ந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் சக ஐசிசி இயக்குனர்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். நாங்கள் ஒன்று சேர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளோம். 2016-ம் ஆண்டு பதவியேற்றபோது, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்’’ என்றார்.