செய்திகள்
விராட் கோலியின் பந்து வீச்சை எதிர்கொள்ளாதது மகிழ்ச்சி: ஜோக் அடித்த ராஸ் டெய்லர்
நியூசிலாந்து அணி வெற்றியை நெருங்கும்போது விராட் கோலி ஒரு ஓவரை வீசினார். அந்த ஓவரை எதிர்கொள்ளாதது மகிழ்ச்சி என ராஸ் டெய்லர் கிண்டலாக தெரிவித்துள்ளார்.
கிறிஸ்ட்சர்ச் டெஸ்டில் நியூசிலாந்து அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தது. 7 ரன்கள் தேவை என்ற நிலையில் 35-வது ஓவரை விராட் கோலி வீசினார். அப்போது ராஸ் டெய்லர் மற்றும் நிக்கோல்ஸ் ஆகியோர் களத்தில் இருந்தனர். இந்த ஓவரை நிக்கோல்ஸ் வீசினார். 4-வது பந்தை நிக்கோல் பவுண்டரிக்கு விரட்டினார். மற்ற ஐந்து பந்துகளையும் தடுத்து ஆடினார்.
அடுத்த ஓவரில் நியூசிலாந்து மூன்று ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி நீண்ட காலமாக பந்து வீசவில்லை. தற்போது இந்த போட்டியில்தான் பந்து வீசினார்.
இதனை கிண்டல் அடிக்கும் வகையில் ராஸ் டெய்லர், ‘‘இந்திய அணியுடனான தொடர் சிறப்பாக இருந்தது. எந்த வகை கிரிக்கெட்டாக இருந்தாலும் அவர்கள் எப்போதுமே கடிமான எதிர் அணி. வெற்றிக்கான ரன்னை அடிப்பதற்காக விராட் கோலியின் பந்து வீச்சை எதிர்கொள்ளாதது மகிழ்ச்சி’’ என்று தெரிவித்துள்ளார்.