விளையாட்டு
null

சாம்பியன்ஸ் டிராபி போட்டி: 2-வது வெற்றி யாருக்கு?- ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா நாளை மோதல்

Published On 2025-02-24 10:31 IST   |   Update On 2025-02-24 14:14:00 IST
  • இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றன.
  • இரு அணிகளிலும் திறமையான வீரர்கள் இருப்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ஐ.சிசி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 7-வது லீக் ஆட்டம் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் நாளை (25-ந்தேதி) நடக்கிறது. இதில் பி பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றன. இதனால் 2-வது வெற்றியை பெற்று அரை இறுதி வாய்ப்பை பெறப்போவது ஆஸ்திரேலியாவா? தென் ஆப்பிரிக்காவா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டீவ் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு எதிராக 352 ரன் இலக்கை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜோஷ் இங்கிலிஷ் , மேத்யூ ஷார்ட், மேக்ஸ்வெல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 315 ரன்களை குவித்து 102 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரியான் ரிக் கெல்டன், கேப்டன் பவுமா, மர்க்கிராம், வான்டர் டூசன் ஆகியோர் பேட்டிங்கிலும், ரபடா, நிகிடி, வியான் முல்டர் பந்து வீச்சிலும் திறமையை வெளிப்படுத்தி இருந்தனர்.

இரு அணிகளிலும் திறமையான வீரர்கள் இருப்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Tags:    

Similar News